Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ நேபாளம் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமான முன்னாள் பிரதமர் மீது வழக்கு

நேபாளம் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமான முன்னாள் பிரதமர் மீது வழக்கு

நேபாளம் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமான முன்னாள் பிரதமர் மீது வழக்கு

நேபாளம் போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமான முன்னாள் பிரதமர் மீது வழக்கு

ADDED : அக் 08, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
காத்மாண்டு:நேபாளத் தில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 8ம் தேதி, இளம் தலை முறையினர் பார்லிமென்டை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இந்த போராட்டங்கள் நாடு முழுதும் பரவி வன்முறையாக வெடித்தது.

இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த போராட் டத்தில் 76 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இச்சம்பவத்தையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், தன் அர சையும் கலைத்தார்.

இப்போராட்டங்களின் போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட இறப்புகளுக்கு காரணமாக இருந்ததாக, முன்னாள் பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போராட்டங்கள் குறித்து விசாரிக்க ஏற்கனவே நீதிபதி கவுரி பகதுார் கார்கி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த எப்.ஐ.ஆர்., அறிக்கையை அக்குழுவின் விசாரணைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us