டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்

அவகாசம்
இப்போரை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்சங்கள் உள்ள அமைதி திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இதற்கு இஸ்ரேல் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து பதிலளிக்க ஹமாஸ் அமைப்புக்கு, நாளை மாலை 6:00 மணி வரை அவகாசம் அளிப்பதாக காலக்கெடு விதித்திருந்தார்.
பேச்சு
மேலும், வெளிநாட்டு மேற்பார்வை என்பதையும் ஹமாஸ் நிராகரித்துள்ளது. விரிவான பாலஸ்தீன தேசிய கட்டமைப்பில் ஹமாஸ் ஒரு பகுதியாக இருக்கும் எனக் கூறி, எதிர்கால ஆட்சியில் தனக்கான பங்கை விட்டுக்கொடுக்க மறுத்துள்ளது.சுருக்கமாக கூறுவ தென்றால், பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை நிறுத்தவும் ஹமாஸ் தயாராக உள்ளது.
'
ஒத்துழைப்பு அளிப்போம்
'
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பை இஸ்ரேல் அளிக்கும் என, இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


