Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா!

Latest Tamil News
நியூயார்க்: ''இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சி செய்யும். உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கடுமையாக சாடினார்.

ஐநாவில் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பங்கேற்று, பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாக சாடி பேசினார்.

அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும், துரதிர்ஷ்டவசமாக, எனது நாட்டிற்கு எதிராக பாகிஸ்தானின் மாயையான கூச்சலைக் கேட்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக காஷ்மீர் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர். இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்து இருக்கிறோம்.

தனது சொந்த மக்களை குண்டுவீசி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் பாகிஸ்தான், தவறான பொய் பிரசாரம் மூலம் உலகை திசைதிருப்ப மட்டுமே முயற்சிக்க முடியும்.1971ல் தனது சொந்த ராணுவத்தால் 4 லட்சம் பெண்களை இனப்படுகொலை செய்யும் திட்டமிட்ட பிரசாரத்தை அங்கீகரித்த நாடு.

உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு பர்வதனேனி ஹரிஷ் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us