அமெரிக்காவில் அதிகரித்து வரும் புலம் பெயர் இந்திய மருத்துவர்கள்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் புலம் பெயர் இந்திய மருத்துவர்கள்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் புலம் பெயர் இந்திய மருத்துவர்கள்
UPDATED : ஜூன் 15, 2024 08:29 PM
ADDED : ஜூன் 15, 2024 08:24 PM

அமெரிக்காவிற்கு புலம் பெயர் மருத்துவர்களாக குடியேறுபவர்களின் ஐந்தில் ஒருவர் இந்தியர் என ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் செயல்படும் ரீமிலிட்டி என்ற அமைப்பும் , எம்.பி.ஐ., எனப்படும் குடியேற்ற கொள்கை மையம் ஆகியன வெளியிட்டுள்ள குறியீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் மொத்தம் 9.9 லட்சம் மருத்துவர்களின், 2.06 லட்சம் பேர் பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறிய புலம் பெயர் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதலிடத்தில் பிலிப்பைன்சும், இரண்டாமிடத்தில் மெக்ஸிகோவும், மூன்றாவது இடத்தில் இந்திய மருத்துவர்கள் உள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து மருத்துவ பணியாற்ற வருபவர்களில் ஐந்தில் ஒருவர் இந்திய மருத்துவர்கள் என 59 ஆயிரம் பேர் உள்ளனர். தவிர சீனா, ஹாங்காங், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த மருத்துவர்களும் உள்ளனர்.
அதே வேளையில் நர்ஸிங் உதவியாளர்கள், மற்றும் சுகாதார நிபுணர்களும் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து பணியாற்ற வருபவர்களில் இந்தியர்கள் முதலிடத்திலும், பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ நாட்டவர்கள் உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.