ஹிந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் "பிரமிப்பு"
ஹிந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் "பிரமிப்பு"
ஹிந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் "பிரமிப்பு"
ADDED : ஜூன் 30, 2024 12:01 PM

லண்டன்: ஹிந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லண்டனில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் ரிஷிக் சுனக் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:
பகவத் கீதையை வைத்து, பார்லிமென்ட் உறுப்பினராக பதவியேற்றதில் நான் பெருமை அடைகிறேன். நமது கடமையை உண்மையாகச் செய்ய வேண்டும். ஹிந்து மத நம்பிக்கையில் இருந்து உத்வேகமும், ஆறுதலும் கிடைக்கிறது. இதை என் அன்பான பெற்றோர் எனக்கு கற்று கொடுத்து வளர்த்தனர். தற்போது நான் என் பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்கிறேன். பொது சேவை செய்ய தர்மம் தான் எனக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கிரிக்கெட்டில் மகிழ்ச்சியா?
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பிரசாரத்தின் போது, ரிஷி சுனக் 'எல்லோருக்கும் கிரிக்கெட்டில் மகிழ்ச்சியா?' என கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் மகிழ்ச்சி என்று ஆரவாரத்துடனும் கைதட்டலுடனும் பதிலளித்தனர்.