Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

UPDATED : ஜூன் 19, 2025 12:41 PMADDED : ஜூன் 18, 2025 07:06 PM


Google News
Latest Tamil News
டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.

இது தொடர்பாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு மக்களுக்கு டிவி மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கு அந்நாடு தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். திணிக்கப்பட்ட போர் மற்றும் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராக ஈரான் உறுதியுடன் நிற்கிறது. யாரிடமும் சரணடைய மாட்டோம்.

ஈரானையும்,அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், அச்சுறுத்தலின் மொழிக்கு ஈரானியர்கள் சரியாக பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிவார்கள். அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சரி செய்ய முடியாத அளவுக்கு பின் விளைவு ஏற்படும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதிகாரிகள் முழு பலத்துடன் தங்களது பணிகளை தொடர வேண்டும். கடவுள் நிச்சயம் நம்மை வெற்றிபெறச் செய்வார். அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடந்த போது, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டத்தில் ஈரான் பதிலடி கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது என்பது இஸ்ரேலின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெறிச்சோடி காணப்படும் டெஹ்ரான்: தலைநகர் டெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்நகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரிதாகவே, சாலைகளில் டூவிலர்கள் மற்றும் கார்கள் செல்வதை பார்க்க முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வெளிநாட்டினர் மீட்பு இதனிடையே, ஈரானுடன் மோதல் நடக்கும் நிலையில், இஸ்ரேலில் உள்ள கிரேக்கர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவர்கள் எகிப்து வழியாக பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சொந்த நாட்டிற்கு கிளம்பி சென்றனர்.



அண்டை நாடுகளிடம் கோரிக்கை
தங்கள் நாட்டிற்குள் ஊடுருவல்காரர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என தனது அண்டை நாடுகளிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லையில் நிலவும் சூழ்நிலையை ஈரான் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us