Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/31ம் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார்; நேபாளத்தின் காமி ரீட்டா ஷெர்பா உலக சாதனை

31ம் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார்; நேபாளத்தின் காமி ரீட்டா ஷெர்பா உலக சாதனை

31ம் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார்; நேபாளத்தின் காமி ரீட்டா ஷெர்பா உலக சாதனை

31ம் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறினார்; நேபாளத்தின் காமி ரீட்டா ஷெர்பா உலக சாதனை

UPDATED : மே 28, 2025 01:03 PMADDED : மே 28, 2025 12:59 PM


Google News
Latest Tamil News
காத்மாண்டு: நேபாளத்தின் காமி ரீட்டா ஷெர்பா, 31வது முறையாக உலகின் உயரமான எவரஸ்ட் சிகரத்தை (8,848.86 மீ) வெற்றிகரமாக ஏறினார்.

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நேபாளத்தில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உச்சியை அடைவது சாதனையாக கருதப்படுகிறது.

நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டியான 55 வயது காமி ரீட்டா, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் அதிக அளவில் ஏறி சாதனை படைத்தவர். தற்போது அவர் 31வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை 27 மே 2025 அன்று வெற்றிகரமாக ஏறினார்.

இதன் மூலம், இவர் அதிக முறை எவரெஸ்ட் ஏற்றம் எனும் கின்னஸ் உலக சாதனையை மீண்டும் ஏற்படுத்தி உள்ளார்.

காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர்.

காமி ரீட்டா நல்ல ஆரோக்கியத்துடன், மற்ற குழுவினருடன் சேர்ந்து பேஸ் கேம்ப் நோக்கி இறங்கத் தொடங்கி உள்ளார்.

குழுவினர் இன்று பேஸ் கேம்பை அடைந்து நாளைக்குள் தலைநகருக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us