சொந்த காசில் சூனியம் வைத்த பாகிஸ்தான் புலிகேசி
சொந்த காசில் சூனியம் வைத்த பாகிஸ்தான் புலிகேசி
சொந்த காசில் சூனியம் வைத்த பாகிஸ்தான் புலிகேசி
ADDED : மே 27, 2025 06:53 AM

இந்தியாவை போரில் ஜெயித்து விட்டதாக கூறி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு விருந்து வைத்தார்,
ராணுவ தளபதி அசிம் முனீர். அவருக்கு நினைவு பரிசாக மிகப்பெரிய போட்டோவை ஷெபாஸ் ஷெரிப் வழங்கினார். இந்தியாவை நோக்கி சீறி பாய்ந்த நம் ஏவுகணைகள் என்று விளக்கம் சொன்னார்.
வந்திருந்த முப்படை தளபதிகளும், வி.ஐ.பி.,க்களும் பாக்., பிரதமருடன் சேர்ந்து மெய் சிலிர்த்தனர். உற்சாகத்தில் பார்ட்டி களைகட்டியது. நிகழ்ச்சியின் வீடியோ வெளியானதும் சாயம் வெளுத்தது.
அந்த போட்டோ, 2019ல் சீனாவில் நடந்த போர் ஒத்திகையின்போது எடுத்தது என்று அம்பலப்படுத்தினார், ஒரு பாக். பத்திரிகையாளர். உலகமே சிரிப்பதை பார்த்து, மொத்த பாகிஸ்தானும் தலைகுனிந்து நிற்கிறது.