Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ வெப்பம் அதிகரிப்பால் அழிந்து வரும் பென்குயின்; 15 ஆண்டில் 22 சதவீதம் பலி

வெப்பம் அதிகரிப்பால் அழிந்து வரும் பென்குயின்; 15 ஆண்டில் 22 சதவீதம் பலி

வெப்பம் அதிகரிப்பால் அழிந்து வரும் பென்குயின்; 15 ஆண்டில் 22 சதவீதம் பலி

வெப்பம் அதிகரிப்பால் அழிந்து வரும் பென்குயின்; 15 ஆண்டில் 22 சதவீதம் பலி

ADDED : ஜூன் 12, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
லண்டன்: அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எம்பரர் பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

பென்குயின்களில் மிகவும் உயரமானது எம்பரர் பென்குயின் எனப்படுகிறது. இது, 4 அடி உயரம் வரை இருக்கும்.

கடந்த 2009 முதல் இங்கு உள்ள பென்குயின்களின் 16 காலனிகளை பிரிட்டிஷ் அன்டார்டிகா ஆய்வு குழு, செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்து வருகிறது.

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்கிறது. இது பென்குயின்கள் குஞ்சு பொறிப்பை பாதிக்கிறது. 2009ல் ஆய்வாளர்கள் அன்டார்க்டிகாவில் உள்ள பென்குயின்களில் 9.5 சதவீதம் அழியும் என கணித்திருந்தனர்.

தற்போது பிரிட்டிஷ் அன்டார்டிகா குழுவினர் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் முந்தைய கணிப்பை காட்டிலும் பென்குயின்கள் மிக அதிகமாக 22 சதவீதம் அளவுக்கு அழிந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் அதில் கூறுகையில், '2022ல், அன்டார்டிகாவின் பெலிங்ஷாஸன் கடலின் மேற்பரப்பில் இருந்த பனி முன்கூட்டியே உடைந்தது. இதனால் அங்கு முட்டையிலிருந்து பொறிந்த ஆயிரக்கணக்கான பென்குயின் குஞ்சுகள் இறந்தன.

'இது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகிறது. மேலும், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் எம்பரர் பென்குயின்கள் அழிந்து போகலாம்' என அதில் எச்சரித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us