Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!

போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!

போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!

போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!

ADDED : ஜூலை 01, 2025 04:47 PM


Google News
Latest Tamil News
பாங்காக்: போன் பேச்சு கசிவு தொடர்பாகதாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ராவை, அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஜூலை 1 முதல் பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

எல்லையில் உள்ள எமரால்டு முக்கோணம் எனப்படும் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே மே 28ல் மோதல் ஏற்பட்டது. இதில், கம்போடியோ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், செனட் சபை தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.

அப்போது பிரதமர் ஷினவத்ரா, தாய்லாந்து ராணுவ தளபதியை எதிரி என்றும், பயனற்றவற்றை பேசுவதாகவும் கூறியிருந்தார். இந்த உரையாடல்கள் கசிந்தன.

இதனை தொடர்ந்து தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த தாய்லாந்தின் அரசியல் சாசன நீதிமன்றம், பிரதமர் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. மேலும் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட இருப்பதால், பிரதமரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து ஷினவத்ரா கூறியதாவது:

எனது பணிக்கு இடையூறு ஏற்படுவதை நான் விரும்ப வில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவால் நான் வேதனையில் உள்ளேன். இவ்வாறு ஷினவத்ரா கூறினார்.

இந்நிலையில் தாய்லாந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us