உக்ரைன் எல்லையில் 4 கிராமங்களை பிடித்த ரஷ்யா
உக்ரைன் எல்லையில் 4 கிராமங்களை பிடித்த ரஷ்யா
உக்ரைன் எல்லையில் 4 கிராமங்களை பிடித்த ரஷ்யா

கீவ் : உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் உள்ள நான்கு கிராமங்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதில், இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையை நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
மே 16 முதல் 18 வரை உக்ரைன் மீது 900 ட்ரோன்களை ஏவி, ரஷ்யா தாக்குதல் நடத்தியது. சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள நான்கு எல்லையோர கிராமங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. அந்த கிராமங்களில் வசித்த மக்கள், ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.