துர்கா பூஜை கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
துர்கா பூஜை கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
துர்கா பூஜை கொண்டாட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : செப் 17, 2025 02:12 AM
டாக்கா: வங்கதேசத்தில், துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று ஆய்வு செய்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்கள் மீதும், கோவில்கள் மீதும் தாக்குதல் அதிகரித்தன.
இந்த நிலையில் அங்கு அடுத்த வாரம் துர்கா பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவில் உள்ள தாகேஷ்வர் கோவிலுக்குச் சென்று துர்கா பூஜைக்கான ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார்.