சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
ADDED : ஜூன் 19, 2025 10:51 AM

டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இதனால், தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த முயற்சி
ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் 10வது ராக்கெட்டின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.