Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஓட்டெடுப்பில் வெற்றி; ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி

ஓட்டெடுப்பில் வெற்றி; ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி

ஓட்டெடுப்பில் வெற்றி; ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி

ஓட்டெடுப்பில் வெற்றி; ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி

UPDATED : அக் 21, 2025 12:19 PMADDED : அக் 21, 2025 11:32 AM


Google News
Latest Tamil News
டோக்கியோ: ஜப்பான் பார்லிமெண்ட்டில் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சனேனே டகாய்ச்சி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆகிறார்.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

இந் நிலையில், ஜப்பான் பார்லிமெண்ட்டில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. கீழவையில் நடைபெற்ற மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் ஓட்டெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார். ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வாழ்த்து

புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஜப்பான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும், ஜப்பானும் உருவாக்கியுள்ள ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கூட்டணியை, உங்களுடன் இணைந்து திறம்பட செயல்படுத்த ஆவலுடன் இருக்கிறேன். இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை ஏற்படுத்துவதில் இந்திய - ஜப்பானிய நல்லுறவானது தவிர்க்க முடியாத ஒன்று. இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us