Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இத்தாலியில் துயரம்; சாலை விபத்தில் நாக்பூரை சேர்ந்த இருவர் பலி

இத்தாலியில் துயரம்; சாலை விபத்தில் நாக்பூரை சேர்ந்த இருவர் பலி

இத்தாலியில் துயரம்; சாலை விபத்தில் நாக்பூரை சேர்ந்த இருவர் பலி

இத்தாலியில் துயரம்; சாலை விபத்தில் நாக்பூரை சேர்ந்த இருவர் பலி

ADDED : அக் 03, 2025 04:29 PM


Google News
Latest Tamil News
ரோம்: இத்தாலி குரோசெட்டோ நகர் அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இருவர் பலியானதற்கு அங்குள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

இத்தாலியில் உள்ள குரோசெட்டோ நகர் அருகே, ஒரு பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நாக்பூரை சேர்ந்த இரண்டு இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: குரோசெட்டோ நகர் அருகே, நடந்த விபத்தில் நாக்பூரை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயர சம்பவத்திற்கு வருந்துகிறோம்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருடனும், இத்தாலியில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடனும் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருக்கின்றனர்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us