வெளிநாட்டு எதிரியின் பிடியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்போம்: டிரம்ப் சபதம்
வெளிநாட்டு எதிரியின் பிடியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்போம்: டிரம்ப் சபதம்
வெளிநாட்டு எதிரியின் பிடியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸை விடுவிப்போம்: டிரம்ப் சபதம்
ADDED : ஜூன் 11, 2025 08:19 AM

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் சபதம் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ந்து 5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை கும்பல்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஒரு காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் தூய்மையான, பாதுகாப்பான, அழகான நகரமாக இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன்.
அவர்களின் பிடியில் இருந்து நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸை விடுவித்து அதை மீண்டும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவோம். நமது ராணுவ வீரர்கள் கலிபோர்னியாவின் நேர்மையான குடிமக்களை பாதுகாப்பார்கள். இவ்வாறு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.