Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/வெள்ளை இன மக்கள் கொலை: தென் ஆப்ரிக்க அதிபரிடம் நேரடியாக குற்றம்சாட்டிய டிரம்ப்

வெள்ளை இன மக்கள் கொலை: தென் ஆப்ரிக்க அதிபரிடம் நேரடியாக குற்றம்சாட்டிய டிரம்ப்

வெள்ளை இன மக்கள் கொலை: தென் ஆப்ரிக்க அதிபரிடம் நேரடியாக குற்றம்சாட்டிய டிரம்ப்

வெள்ளை இன மக்கள் கொலை: தென் ஆப்ரிக்க அதிபரிடம் நேரடியாக குற்றம்சாட்டிய டிரம்ப்

Latest Tamil News
வாஷிங்டன்: தென் ஆப்ரிக்காவில் வெள்ளை இன மக்களின் விவசாய நிலங்கள் பறித்து கொள்ளப்படுவதோடு, அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர், என அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம்சாட்டினார்.

தென் ஆப்ரிக்காவில் வசிக்கும் வெள்ளை இன மக்கள் வைத்துள்ள நிலங்கள் தொடர்பாக அந்நாடு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதனால் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்குவதை அமெரிக்க நிறுத்தி சில குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதற்கு தென் ஆப்ரிக்கா மறுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை தென் ஆப்ரிக்கா மறுத்து இருந்தது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு என்றே, ஓவல் அலுவலகத்தில் பெரிய திரைகள் கொண்ட டிவிக்களை அமைத்து இருந்தனர். சந்திப்பு துவங்கியதும், அறையில் இருந்த விளக்குகளின் வெளிச்சத்தை குறைத்துவிட்டு, தென் ஆப்ரிக்காவில் வெள்ளை இன விவசாயிகள் இனப்படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட்டார். சுமார் 4 நிமிடங்கள் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிரம்ப் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் வெள்ளை இன மக்களின் நிலத்தை பறித்து கொள்ள அனுமதிக்கின்றீர்கள். நிலத்தை எடுத்துக் கொண்ட பிறகு, வெள்ளை இனத்தை சேர்ந்த விவசாயிகள் கொல்லப்படுகின்றனர். கொலை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோபமாக கூறினார்.

இதற்கு அமைதியாக பதிலளித்த ரமபோசா, ' இல்லை, இல்லை. யாரின் நிலமும் பறிக்கப்படவில்லை. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் கொடூர குற்றல்களினால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக கறுப்பு இன மக்கள் உள்ளனர். வீடியோவில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினர் என தெரிவித்தார் தொடர்ந்து அவர் பேச முயற்சித்த நிலையில், டிரம்ப் அனுமதிக்கவில்லை. இதனால் டிரம்ப்பை தென் ஆப்ரிக்கா அதிபரால் சமரசப்படுத்த முடியவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us