அமெரிக்கா டாக்டர் அவதாரம் எடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்கா டாக்டர் அவதாரம் எடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்கா டாக்டர் அவதாரம் எடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
ADDED : செப் 23, 2025 11:10 PM

வாஷிங்டன்: பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், பாரசிட்டமால் என்று அழைக்கப்படும் 'அசெட்டமினோபெனின்' என்ற மருந்து, அமெரிக்காவில், 'டைலெனால்' என்ற பெயரில் விற்கப்படுகிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வலி நிவாரணியான டைலெனாலை பயன்படுத்துவது ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று, டாக்டர்களுக்கு அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். இது, பல்வேறு தரப்பினரிடையே விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
இதை மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் மறுத்துள்ளனர். இந்த குறிப்பிட்ட மருந்து, ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், ஒரு புதிய ஆய்வை துவங்குவதாகவும், இந்த விஷயத்தில் டாக்டர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும், டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.