Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் நுழைய மேலும் 36 நாட்டவர்களுக்கு தடை விதிக்க முடிவு

அமெரிக்காவில் நுழைய மேலும் 36 நாட்டவர்களுக்கு தடை விதிக்க முடிவு

அமெரிக்காவில் நுழைய மேலும் 36 நாட்டவர்களுக்கு தடை விதிக்க முடிவு

அமெரிக்காவில் நுழைய மேலும் 36 நாட்டவர்களுக்கு தடை விதிக்க முடிவு

ADDED : ஜூன் 15, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: அமெரிக்காவில் நுழைய மேலும் 36 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி ஏற்கனவே ஏராளமான நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு 41 நாடுகள் பட்டியலில் சிவப்பு பிரிவில், ஆப்கானிஸ்தான், பூடான், கியூபா, ஈரான், சிரியா, வட கொரியா, ஏமன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது முழுமையாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஆரஞ்ச் பிரிவில், ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர் உட்பட, 10 நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்த நாடுகளுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறுகிய காலத்துக்கான விசா மட்டுமே வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் விசா விதிமீறல்கள் உள்ளிட்டவையை அடிப்படையாக வைத்து, அமெரிக்காவில் நுழைய 36 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முழு அல்லது பகுதியளவிலான தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்திட்குட்பட்ட அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடுகளும் அடங்கியுள்ளன.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போது, அவர்கள் தொடர்பான தகவல்களை உறுதி செய்வதில் உள்ள குறைபாடுகளை, 60 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட உள்ள நாடுகள்
ஆப்பிரிக்கா (25 நாடுகள்): அங்கோலா, பெனின், புர்கினா பாசோ, கேப் வெர்டே, கமரூன், கோட் டி'ஐவோர், காங்கோ ஜனநாயக குடியரசு, டிபோட்டி, எகிப்து, எத்தியோப்பியா, கேபன், காம்பியா, கானா, லைபீரியா, மலாவி, மொரிட்டானியா, நைஜர், நைஜீரியா, சாவோ டோம் & பிரின்சிபே, செனகல், தெற்கு சூடான், தான்சானியா, உகாண்டா, சாம்பியா, ஜிம்பாப்வே கரீபியன் & பசிபிக் தீவுகள்; ஆன்டிகுவா & பார்புடா, டொமினிகா, செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ், செயிண்ட் லூசியா, டோங்கா, துவாலு, வனுவாட்டு ஏனைய நாடுகள்: பூடான், கம்போடியா, கிர்கிஸ்தான், சிரியா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us