Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா; காரணம் இதுதான்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா; காரணம் இதுதான்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா; காரணம் இதுதான்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா; காரணம் இதுதான்!

Latest Tamil News
ஒஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நார்வையில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடி உள்ளது.

இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு நார்வே குழுவினர் அறிவித்தனர். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்ததாக நார்வே குழுவினர் தெரிவித்தனர்.

உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என நார்வே குழுவினர் பாராட்டியும் இருந்தனர்.

இந்நிலையில், நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு வெனிசுலா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காரணத்தை தெரிவிக்காமல் கராகஸ் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடிவிட்டதாக நார்வேயின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்த முடிவு வருந்தத்தக்கது.

பல விஷயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெனிசுலாவுடன் தொடர்ந்து உறவை விரும்புகிறோம் என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us