Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/கொள்ளை போனதை மீட்க வேண்டும்; நேபாள போராட்டக்குழு கூறுவது இதுதான்!

கொள்ளை போனதை மீட்க வேண்டும்; நேபாள போராட்டக்குழு கூறுவது இதுதான்!

கொள்ளை போனதை மீட்க வேண்டும்; நேபாள போராட்டக்குழு கூறுவது இதுதான்!

கொள்ளை போனதை மீட்க வேண்டும்; நேபாள போராட்டக்குழு கூறுவது இதுதான்!

ADDED : செப் 10, 2025 12:46 PM


Google News
Latest Tamil News
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தவும், நிர்வாகத்தில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், போராட்டக்குழுக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நேபாளத்தில் சமூக வலைதளங்களை தடை செய்ததை கண்டித்து தொடங்கிய போராட்டம், மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கிறது. போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதை தொடர்ந்து, அதிபர், பிரதமர், அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராணுவம், பாதுகாப்பை கையில் எடுத்துள்ளது.இந்த நிலையிலும் போராட்டம் தொடர்கிறது. ஏன் போராட்டம் நடக்கிறது என்பது பற்றி போராட்டக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை:

தற்போதைய பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும். குடிமக்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிர பங்கேற்புடன் அரசியலமைப்பை திருத்துதல் அல்லது முழுமையாக மீண்டும் எழுத வேண்டும்.

இடைக்காலத்திற்குப் பிறகு புதிய தேர்தல்களை நடத்த வேண்டும். சுயாதீனமான, நியாயமான மற்றும் நேரடி பொது மக்கள் பங்கேற்பின் அடிப்படையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத் தலைமையை நிறுவ வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீதான விசாரணை, சட்டவிரோத சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

கல்வி, சுகாதாரம், நீதி, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகிய ஐந்து அடிப்படை அமைப்புக்களின் கட்டமைப்பு சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியன.

போராட்டங்களின் போது உயிரிழந்த அனைவரும் அதிகாரப்பூர்வமாக தியாகிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு அரசு மரியாதை, அங்கீகாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படவேண்டும். வேலையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், இடம்பெயர்வைத் தடுப்பதற்கும், சமூக அநீதியை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த இயக்கம் எந்தவொரு கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ அல்ல, மாறாக முழு தலைமுறைக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும். அமைதி அவசியம், ஆனால் அது ஒரு புதிய அரசியல் அமைப்பின் அடித்தளத்தில் மட்டுமே சாத்தியமாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவம் வெளியிட்ட அறிக்கை:

கடினமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, சாதாரண குடிமக்களுக்கும் பொது சொத்துக்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் சில குழுக்களின் நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்தி உள்ளன. இத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us