சீனாவில் சொகுசு கப்பலில் பயணித்த உலக தலைவர்களின் மனைவியர்
சீனாவில் சொகுசு கப்பலில் பயணித்த உலக தலைவர்களின் மனைவியர்
சீனாவில் சொகுசு கப்பலில் பயணித்த உலக தலைவர்களின் மனைவியர்
ADDED : செப் 04, 2025 06:33 AM

சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், பல நாட்டுத் தலைவர்கள் விவாதித்த அதே நேரத்தில், அவர்களுடைய மனைவியர், சொகுசு கப்பலில் பயணித்து, சீனாவின் பாரம்பரிய கலாசாரத்தை நேரில் பார்த்து அனுபவித்தனர்.
நம் அண்டை நாடான சீனாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, சமீபத்தில் நடந்தது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த இரு நிகழ்ச்சிகளில், பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பேசியதுடன், இரு தரப்பு உறவுகள் குறித்து பல நாட்டுத் தலைவர்கள் விவாதித்தனர்.
இந்த நேரத்தில், வெளிநாட்டுத் தலைவர்களின் மனைவியரை, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் மனைவி பெங்க் லியுவான் சந்தித்தார். குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு, அளவளாவினர்.
இதைத் தொடர்ந்து, தியாஜின் நகரின் வரலாறு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில், ஹாயே நதியில், சொகுசு கப்பலில் அவர்கள் பயணம் செய்தனர்.