/உள்ளூர் செய்திகள்/சென்னை/3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் அரிசி கையிருப்பு3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் அரிசி கையிருப்பு
3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் அரிசி கையிருப்பு
3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் அரிசி கையிருப்பு
3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் அரிசி கையிருப்பு
சென்னை : இந்த ஆண்டு நெல் கொள்முதல், 15 லட்சம் டன்னை தாண்டிவிட்டது.
இது தொடர்பாக, உணவுத் துறை செயலர் சண்முகம் கூறியதாவது: பொது வினியோகத் திட்டத்தில் வழங்க, உணவு தானியங்கள், எண்ணெய் போன்றவை போதுமான இருப்பு உள்ளன. பருப்பு வகைகள் நான்கு மாத தேவைக்கு இருப்பு உள்ளன. வெளிச்சந்தையில் விலை உயர்ந்தாலும், பொது வினியோகத் திட்டத்தில் பாதிப்பு இருக்காது. அதிக இருப்பு உள்ளதால், வெளிச்சந்தையில் விலை உயர வாய்ப்பில்லை. கடந்த அக்டோபர் முதல் இந்த ஆண்டு நெல் கொள்முதல், 15 லட்சம் டன்னை தாண்டிவிட்டது. சிவில் சப்ளைஸ் கொள்முதல் செய்தது தவிர, கூடுதலாக 30 ஆயிரம் டன் நெல், கூட்டுறவுத் துறையால் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, குறுவை பயிரை சேர்த்து 17.9 லட்சம் டன் கொள்முதல் செய்யப் பட்டது. இதில் குறுவை பயிர் மட்டும் மூன்று லட்சம் டன். இந்த ஆண்டு இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுடன், குறுவை பயிர் சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் மேலும் ஒரு லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும். எனவே, அரிசி, நெல் ஆகியவற்றின் கையிருப்பு நன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கூடுதல் விலை கொடுப்பது மற்றும் வெளிச்சந்தையில் நெல் கொள்முதலுக்கு அதிக, "டிமாண்ட்' இல்லாதது தான். இதன் காரணமாக, வெளிச்சந்தையில் அரிசி விலை குறையும். இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவை சேர்த்து, தமிழகத்துக்கு தற்போது 11 லட்சம் டன் அரிசி கையிருப்பு உள்ளது. பொது வினியோகத் திட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்க இது போதுமானது. இவ்வாறு சண்முகம் கூறினார்.