தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை
தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை
தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை
UPDATED : மே 13, 2010 12:35 AM
ADDED : மே 13, 2010 12:34 AM

சென்னை : "தகவல் தொழில்நுட்பத்துறை மூலம், மூன்றரை லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்' என, அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ., ஜெயபால் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் பூங்கோதை அளித்த பதில்: சென்னை தரமணியில் தொழில்துறை சார்பில், டைடல் பார்க் செயல்படுகிறது. சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்பது தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படுகின்றன. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஐ.டி.பார்க் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இந்த நிதியாண்டில் செயல்படத் துவங்கும்.
தகவல் தொழில் நுட்பத்துறை மூலம், மூன்றரை லட்சம் பேர் பணி பெற்றுள்ளனர். வரும் ஆண்டில், இந்த துறையில் 14 சதவீதம் வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மேலும் நான்கு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில், போதிய இடம் கிடைத்தால், ஐ.டி., பார்க் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு பூங்கோதை தெரிவித்தார்.