போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் தடை
போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் தடை
போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி: போலீஸ் அதிகாரிகள் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
இந்த நான்கு அதிகாரிகள் மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்கையும், "டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு எடுத்தது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றனர். நான்கு போலீஸ் அதிகாரிகள் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நான்கு அதிகாரிகளும் பதில் மனுக்களை தாக்கல் செய்து விட்டனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் போலீஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ராமசுப்ரமணியன், பிரேமானந்த் சின்கா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தால் எங்களுக்கு நீதி கிடைக்காது என கருதுவதற்கு நியாயம் உள்ளது. நியாயமான விசாரணை நடக்க அங்கு சுமுகமான சூழ்நிலை நிலவவில்லை. வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையேயான பிரச்னையை விசாரிக்க ஐகோர்ட் ஒரு வசதியான அமைப்பு இல்லை. எங்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கவும், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இருந்தும், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஐகோர்ட் வளாகத்தில் நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு பேசும் போது வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, கோர்ட் அவமதிப்பு வழக்கை வேறு ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் உள்ள கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் சிங்வி, கங்குலி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மூன்று அதிகாரிகள் சார்பில் சீனியர் வக்கீல் சொலி சொராப்ஜி, "இந்த வழக்கை நடத்த சென்னையில் சுமுகமான சூழ்நிலை இல்லை. அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தலைமை நீதிபதி, தமிழக முதல்வர் கலந்து கொண்டனர். முதல்வரை பேச அனுமதிக்காமல் வக்கீல்கள் செயல்பட்டனர்' என்றார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு, சுப்ரீம் கோர்ட் "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.