/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/"தினமலர்' போட்டோகிராபர் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை"தினமலர்' போட்டோகிராபர் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை
"தினமலர்' போட்டோகிராபர் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை
"தினமலர்' போட்டோகிராபர் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை
"தினமலர்' போட்டோகிராபர் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில்"தினமலர்' போட்டோகிராபர் மாதவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியினர் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். போலீசார் அப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று, சமூகவிரோத கும்பலை விரட்டியடித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இளநீர் கடை குடிசையில் , முத்துக்குமார், முருகன் தலைமையிலான கும்பல் உ.பா., மயக்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த "தினமலர்' போட்டோகிராபர் மாதவன், ""பொதுஇடத்தில் இப்படி நடந்து கொண்டால் இவ்வழியாக செல்லும் பெண்களுக்கு எப்படிபாதுகாப்பு கிடைக்கும், பொதுஇடத்தில் மது அருந்துவது தவறானது,'' என, அறிவுரை கூறி உள்ளார்.இதை தொடர்ந்து மாதவன் மறுநாள் அலுவலகத்திலிருந்து அவ்வழியாக பணிக்கு சென்ற போது, வழிமறித்த முத்துகுமார், முருகன் தலைமையிலான கும்பல், மாதவனை கடுமையாக தாக்கினர்.
மேலும் "தினமலர்' அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மாதவன், பிரதீப்குமார் எஸ்.பி., யிடம் புகார் செய்தார். உடனடியாக கேணிக்கரை இன்ஸ் பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு , தாக்குதலுக்கு தலைமை வகித்த முருகனை கைது செய்து, திருவாடானை ஜெயிலில் அடைத்தனர். முதல் குற்றவாளியான முத்துக்குமார் மற்றும் தலைமறைவான மற்றவர்களையும் தேடிவருகின்றனர்.