அ நிறம் | அளவு
பொள்ளாச்சி : தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சைக்கான சிறப்பு முகாம் இன்று துவங்குகிறது.பொள்ளாச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் நாகராஜ் கூறியதாவது:மாடுகளில், கலப்பின பசுக்கள் சேர்க்கை அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களினால், சினை பிடிக்காமல் இருப்பது அதிகரித்து உள்ளது.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாடுகளுக்கு மலடு நீக்கம் செய்யும் வகையிலும், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. முதல் முகாம் வரும் 4ம் தேதி (இன்று) கிணத்துக்கடவு ஒன்றியம் காரசேரியிலும், வரும் 11ம் தேதி சொலவம்பாளையத்திலும், 16ம் தேதி ஆனைமலை ஒன்றியம் நரிக்கல்பதியிலும், 19ம் தேதி வடக்கு ஒன்றியம் கோவிந்தனூரிலும், 23ம் தேதி நரசிங்காபுரத்திலும், 25ம் தேதி தெற்கு ஒன்றியம் பொன்னாச்சியூரிலும், 30ம் தேதி கொங்கலப்பம்பாளையத்திலும் நடக்கிறது. இதில், விவசாயிகள் சினை பிடிக்காமல் உள்ள பசுக்களை அழைத்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். கால்நடை பராமரிப்பு குறித்து சந்தேகம் இருந்தாலும், டாக்டர்களை அணுகி விளக்கம் பெறலாம். இவ்வாறு, உதவி இயக்குனர் நாகராஜ் தெரிவித்தார்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


