/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அச்சன்புதூரில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு : டவுன் பஞ்.,தலைவர் தகவல்
/
அச்சன்புதூரில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு : டவுன் பஞ்.,தலைவர் தகவல்
அச்சன்புதூரில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு : டவுன் பஞ்.,தலைவர் தகவல்
அச்சன்புதூரில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு : டவுன் பஞ்.,தலைவர் தகவல்
ADDED : நவ 26, 2011 01:06 AM
கடையநல்லூர் : அச்சன்புதூரில் குடிநீர் பிரச்னையை சமாளித்திடவும், குடிநீர் குழாய் சீரமைப்பு செய்திடவும் ரூ.8 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டவுன் பஞ்.,தலைவர் டாக்டர் சுசீகரன் தெரிவித்தார்.
அச்சன்புதூர் டவுன் பஞ்., பகுதிக்கு சிவராமப்பேட்டையிலிருந்து வரக்கூடிய குடிநீர் பைப் லைன் சாலை சீரமைப்பு காரணமாக சேதமடைந்தது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் அமைந்துள்ள அச்சன்புதூர் மற்றும் சுற்றுக் கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின்படி அச்சன்புதூர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக அச்சன்புதூர் டவுன் பஞ்., பொது நிதியிலிருந்து சுமார் ரூ.8 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து டவுன் பஞ்.,தலைவர் டாக்டர் சுசீகரன் கூறுகையில், ''சிவராமப்பேட்டை வழியாக நெடுவயல் அச்சன்புதூர் பகுதிகளுக்கு வரக்கூடிய குடிநீர் குழாயில் ரோடு சீரமைப்பின் போது குழாய்கள் சேதமடைந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு கொண்டதை தொடர்ந்து பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் செலவு செய்திட தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து அச்சன்புதூர் டவுன் பஞ்., பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்திட ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

