கொலோனோஸ்கோபி பரிசோதனை எந்த வயதில் அவசியம்?

கொலோனோஸ்கோபி என்பது பெருங்குடல், மலக்குடல் உட்புறத்தை பரிசோதிக்கும் பரிசோதனை.

புற்றுநோய், நீண்டகால வயிற்று வலி, நீண்ட நாள் வயிற்று போக்கு, மலத்தில் ரத்தம் போதல் போன்றவைக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பரிசோதனை இது.

பொதுவாக 45 வயதிலிருந்து குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங் பரிந்துரைக்கப்படுகிறது.

ரத்த சொந்தத்தில் பாதிப்பு இருந்தால், அடுத்த தலைமுறை 30 வயதிலேயே பரிசோதிப்பது அவசியம்.

இதன் வாயிலாக, புற்றுநோய் அறிகுறி தென்பட்டால், முழுமையாக குணப்படுத்தி விடலாம்.

ஒரு முறை இப்பரிசோதனையில் கேன்சர் இல்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேன்சர் வராது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வது நல்லது.

உணவு செரிமானம், குடல் செயல்பாடுகள், சரியாக இருந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.