பெற்றோருக்கு இதய நோய் இருந்தால் குழந்தைகளுக்கு வருமா?

28-அக்-2024

பரம்பரையில் பெற்றோர்களுக்கோ, உடன்பிறந்தவர்களுக்கோ இதய நோய் இருந்தால், பிள்ளைக்கு இதய நோய் வருமா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.

28-அக்-2024

ஹார்ட் அட்டாக் அல்லது இதய நோய்கள் ஏற்படுவதற்கு மன உளைச்சல், படபடப்பு, பயம் கொள்ளுதல், கோபம் உள்ளிட்ட பல விஷயங்கள் காரணங்களாகும். மன இறுக்கம் மிக முக்கிய காரணம்.

28-அக்-2024

இடது கை வலி, இடது மார்பு வலி, தலைசுற்றல் ஆகியவைகள் வந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது.

28-அக்-2024

இதுபோன்ற அறிகுறி இருந்தால் , பதட்டம் அடையாமல் இதய நோய் சிறப்பு பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

28-அக்-2024

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு, புகைப் பழக்கம், அளவுக்கதிகமான மது அருந்துதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் இதய நோயிலிருந்து தப்பலாம்.

28-அக்-2024

இதய நோய்களை தவிர்க்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

28-அக்-2024

எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தல் நலம். கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

28-அக்-2024