சிதம்பர ரகசியம் என்பது என்ன தெரியுமா?

19-பிப்-2024

சிதம்பரம் கோவிலில் சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது. ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றி... ஆரத்தி காட்டப்படும்.

19-பிப்-2024

இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது.

19-பிப்-2024

தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும்.

19-பிப்-2024

இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம்.

19-பிப்-2024

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும்.

19-பிப்-2024

சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு.

19-பிப்-2024

இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

19-பிப்-2024

சிதம்பர ரகசியம்... சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

19-பிப்-2024