வெயிலால் மயக்கமா? பக்கவாட்டில் படுக்க வையுங்கள்!

25-மார்-2025

கோடை வெயிலில் யாரேனும் மயக்கமடைந்தால், அவர்களை இடது பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

25-மார்-2025

வெயிலில் மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்து இருப்பவர்களை, குப்புற அல்லது மல்லாக்க படுக்க வைக்கலாம். இந்த முறை, சிலருக்கு ஆபத்தாக முடியும்.

25-மார்-2025

சுய நினைவில் இல்லாதவர்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கோ மாரடைப்பு போன்ற பாதிப்புக்கு வாய்ப்புள்ளது.

25-மார்-2025

எனவே, மருத்துவ ரீதியில் பார்க்கும்போது, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களை, இடது பக்கவாட்டில் படுக்க வைக்கும் முறைதான் சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

25-மார்-2025

பின், 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளிக்க வேண்டும். அது வரும் வரை, அவர்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கும் வகையில், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து, உடல் சூட்டை தணிக்கலாம்.

25-மார்-2025

மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க கொடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறையில், அவர்களை வெப்ப வாதத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.

25-மார்-2025