கொத்தவரையின் ஆரோக்கிய நன்மைகள்

07-மே-2025

கொத்தவரை செடி நைட்ரஜன் சத்தை மண்ணில் அதிகரிக்கச் செய்து, வளம் பெருக்கும். இது கொத்தவரங்காய், சீனி அவரை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

07-மே-2025

இதில், வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

07-மே-2025

நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உணவுகளில் இது ஒன்று.

07-மே-2025

உடல் எடை, கொழுப்பை குறைக்கும்; மலச்சிக்கலை போக்கும். இதிலுள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும்.

07-மே-2025

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்; இதயம் தொடர்பான நோய்களை தடுக்க உதவும்.

07-மே-2025

போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

07-மே-2025

கொத்தவரையிலுள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.

07-மே-2025