கண்ணை சுற்றி வரும் கருவளையத்தை சரிசெய்வது எப்படி?

கண்ணுக்கு சரியான ஓய்வு கொடுக்காமல் கம்ப்யூட்டர், அலைபேசியை பார்ப்பது, போதுமான துாக்கமின்மை ஆகியன தற்போது கண்ணை சுற்றி கருவளையம் வர முக்கிய காரணங்களாக உள்ளன.

மேலும் வேறு ஏதாவது உள்நோய்கள் இருப்பது, பிறவியிலேயே எலும்புகள் கண்ணைச் சுற்றி உள்வாங்கியிருப்பது, அலர்ஜி, தோல் சுருக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளை கூறலாம்.

சிலருக்கு பரம்பரையாகவே கண்ணைச் சுற்றி கருவளையம் இருக்கும்.

எந்த பிரச்னையால் கருவளையம் ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும்.

இடையில் வந்த கருவளையம் என்றால் தோல் நோயாக இருக்கும். அதற்குரிய சிகிச்சை பெறவேண்டும்.

சுருக்கம் வராமல் இருக்க தோலுக்கு அடியில் 'பில்லர்ஸ்' பொருத்தும் நவீன வசதியும் உள்ளது.

கருவளையத்தை தவிர்க்க பழங்கள், காய்கறி, கீரை, உலர் பருப்பு என சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் தினமும் போதுமான துாக்கம் அவசியம். வெயிலில் அலைவதை குறைக்க வேண்டும்.