தொடரும் படர்தாமரைக்கு நிரந்தர தீர்வு உள்ளதா?
உடலில் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதியில் படர்தாமரை வருதற்கான வாய்ப்பு அதிகம். இதை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
படர் தாமரை உள்ள பகுதியில் அருகம்புல், தேங்காய் எண்ணெய் சேர்ந்த தைலம் பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் கட்டுக்குள் வந்து விடும்.
அதிகப்படியான அரிப்பை தரக்கூடிய கத்தரிக்காய், கருவாடு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதே போல் உடலையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடியது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.
எனவே, பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் பொருட்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
துணிகளை துவைத்த பின் டெட்டால் கலந்த நீரில் அலசி பயன்படுத்த வேண்டும். ஈரமான துணிகளை அணியக்கூடாது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர் பொது கழிப்பறையை பயன்படுத்தும் போது கூட பரவ வாய்ப்பு உள்ளது. மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால் 15 - 30 நாட்களில் பூரண குணமடையலாம்.