குறை பிரசவத்துக்கு இதுவும் காரணமா?

17-ஜன-2025

தாயின் கருவில் முழு வளர்ச்சி அடையாமல், குறைவான மாதங்களில் குழந்தை பிறந்தால் அதைக் குறை பிரசவம் என்பர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

17-ஜன-2025

அமெரிக்காவின் நியூயார்க் க்ராஸ்மேன் மருத்துவ பல்கலை., 10ல் ஒரு குறை பிரசவம், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் சேர்க்கப்படும் 'தாலேட்'களால் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளது.

17-ஜன-2025

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகளின் உடலில் பல்வேறு 'தாலேட்'கள் இருந்த அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று டீஹெபி (DEHP : di-2-ethylhexyl phthalate).

17-ஜன-2025

மிகவும் ஆபத்தான இந்த ரசாயனம் அதிகமிருந்த கர்ப்பிணிகளுக்கு, ரசாயனம் குறைவாகவுள்ள பெண்களைக் விட குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 50 % அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

17-ஜன-2025

இந்த ரசாயனம் பெரும்பாலும் உணவுப் பொருட்கள் அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்களில் தான் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் வாயிலாக மனித உடலுக்குள் செல்கிறது.

17-ஜன-2025

எனவே இதற்கு மாற்றாக ஆபத்து இல்லாத ரசாயனங்களை பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

17-ஜன-2025

இந்த ரசாயனத்தால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

17-ஜன-2025