ரசாயனம் கலந்த மாம்பழங்கள்... கவனமாக இருங்க !

13-மே-2025

சமீப ஆண்டுகளாகவே, கால்சியம் கார்பைட் பயன்படுத்தி, மாம்பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

13-மே-2025

ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டால், நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுமென சமீபத்திய ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.

13-மே-2025

இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வரத்து மிக குறைவு என்பதால், குறுக்கு வழியில் பழுக்க வைத்து, மார்க்கெட்டில் பலரும் விற்கின்றனர்.

13-மே-2025

எனவே, பொது மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். பழங்கள் வாங்கும் போது, உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை எச்சரித்துள்ளது.

13-மே-2025

இயற்கையாக பழுத்த பழங்கள்; ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

13-மே-2025

இயற்கையாக பழுத்த பழங்கள் லேசான சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும். மிருதுவாக இருக்கும். நீரில் மூழ்கும். ருசியாகவும், அதிகமான சாறுடன் இருக்கும்.

13-மே-2025

கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்கும். ஆங்காங்கே பச்சை, கருப்பு புள்ளிகள் காணப்படும்.

13-மே-2025

மிருதுத்தன்மையை இழந்திருக்கும்; வாசம் இருக்காது; நீரில் மிதக்கும் என அறுவுறுத்தப்பட்டுள்ளது.

13-மே-2025