மருத்துவ குணம் கொண்ட மலர் செண்பகமே.. செண்பகமே...

09-பிப்-2025

அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர்.

09-பிப்-2025

இதன் விதை, வேர் பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்ற பொருட்கள் இருக்கின்றன.

09-பிப்-2025

உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.

09-பிப்-2025

செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.

09-பிப்-2025

செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, மூட்டு வாதத்தை குணமாக்கும்.

09-பிப்-2025

இதில் கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.

09-பிப்-2025

செண்பக மரப்பட்டை, வேப்ப மரப்பட்டை சம அளவு எடுத்து, இடித்து, நான்கு மடங்கு நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என, இரண்டு வேளை குடித்து வர, குளிர் காய்ச்சல் நீங்கும்.

09-பிப்-2025

செண்பகப் பூவை கஷாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.

09-பிப்-2025