வெயிலை குளிர்விக்கும் ஜிகர்தண்டா! ரெசிபி இதோ!

27-மார்-2025

தேவையானவை: பாதாம் பிசின் - ஒரு தேக்கரண்டி, சுண்டக் காய்ச்சி, குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்,

27-மார்-2025

நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் - 2 தேக்கரண்டி, வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.

27-மார்-2025

செய்முறை: பாதாம் பிசினை எட்டு மணி நேரம் ஊற விடவும்.

27-மார்-2025

ஒரு டம்ளரில் பாதாம் பிசினை போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

27-மார்-2025

அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிட கொடுக்கவும்.

27-மார்-2025

விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாமை மேலே துாவலாம். சுவையான மற்றும் சம்மருக்கு சூப்பரான ஜிகர்தண்டா ரெடி...

27-மார்-2025