சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இன்று !

01-அக்-2025

மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான்.

01-அக்-2025

நவராத்திரி விழாவின் இறுதி நாளான மஹா நவமியான 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக் காலம்.

01-அக்-2025

அக்காலத்தில் போர் முக்கியத்துவம் வாய்ந்ததால் வாள், வேல் ஆகியவற்றையும் பூஜிப்பர். இன்று தொழிற்சாலைகளிலுள்ள இயந்திரங்கள், வாகனங்களை அலங்கரித்து வழிபாடு நடக்கிறது.

01-அக்-2025

'வேலையை வழிபடு' என்ற கோட்பாட்டை வலியுறுத்துவதே இந்த எளிய விழாவின் நோக்கம்.

01-அக்-2025

கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட சரஸ்வதி பூஜையை கொண்டாடுவர். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

01-அக்-2025

அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம்முடைய கலை சார்ந்த கலைப்பொருட்களையும் வைத்து பூஜை செய்யலாம்.

01-அக்-2025

மல்லிகை, பிச்சி, துளசி, சாமந்தி, தாமரை மலர்களால் ஆன மாலையை அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.

01-அக்-2025

பாசிபயறு, சுண்டல், கற்கண்டு சாதம், பொரி போன்ற நிவேதனங்களோடு உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறிவகைகள் என, விருந்து படைப்பர்.

01-அக்-2025