இன்று உலக ரேபிஸ் தினம்!

'ரேபிஸ்' வைரசிற்கு 1885ல் முதன்முதலில் பிரான்சை சேர்ந்த லுாயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்.

இவரை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவு தினம், உலக 'ரேபிஸ்' தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

2030ம் ஆண்டுக்குள் 'ரேபிஸ்' வைரசால் உயிரிழப்பே இருக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

'ரேபிஸ்' ஒருவித வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாய் ஆகியவற்றையும் எளிதில் தாக்கக் கூடியது.

ரேபிஸ் வைரஸ் தாக்கிய இவ்விலங்குகள், மனிதர்களை கடிப்பதால் பரவுகிறது.வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனம் தேவை.

அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

'ரேபிஸ்' வைரஸ் தாக்கிய நாய் கடித்தால், அந்த இடத்தை சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின்மருத்துவரை அணுக வேண்டும்.

அலட்சியமாக இருந்தால், உயிரையும் பறிக்கக் கூடியது. 'ரேபிஸ்' வைரசிற்கு பல்வேறு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடனடி சிகிச்சை மிகவும் அவசியம்.