சிவப்பு இறைச்சியில் அதிர்ச்சி ஆபத்து

29-ஆக்-2025

குடல் அழற்சி நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. உடல் எடை இழப்பு, கடும் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள்.

29-ஆக்-2025

இந்த நோயால் கண் பிரச்னை, தோல் நோய்கள் துவங்கி, குடல் புற்று நோய் வரை அடுத்தடுத்து ஏற்படலாம்.

29-ஆக்-2025

உணவுப்பழக்கம், மன அழுத்தம் ஆகியவற்றால் இந்த நோய் தீவிரமடையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

29-ஆக்-2025

சமீபத்தில் இது தொடர்பாக சீனாவில் நடந்த ஆய்வில், ஒரு பகுதி எலிகளுக்கு சிவப்பு இறைச்சி எனும் பன்றி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சி தினமும் தரப்பட்டது.

29-ஆக்-2025

மற்றொரு பகுதி எலிகளுக்கு வழக்கமான உணவு தரப்பட்டது. டெக்ஸ்ட்ரான் சல்பேட் சோடியம் எனும் வேதிப்பொருளை பொதுவாக கொடுத்து, குடல் அழற்சி நோயை துாண்டினர்.

29-ஆக்-2025

2 வாரம் கழித்து ஆராய்ந்ததில், சிவப்பு இறைச்சி உட்கொண்ட எலிகளுக்கு குடல் அழற்சி நோய் தீவிரமடைந்திருந்தது. மற்றவைகளுக்கு அவ்வளவு தீவிரமடையவில்லை.

29-ஆக்-2025

சிவப்பு இறைச்சி உடலுக்கு நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களை அழிப்பதும், தீமை செய்யும் பாக்டீரியாக்களை பெருகச் செய்வதே இதற்கு காரணமாகும்.

29-ஆக்-2025

எலிகள் மீதான ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்தும். தினமும் 100 - 120 கிராம் சிவப்பு இறைச்சி உண்ணும் மனிதர்களுக்கு, குடல் அழற்சி தீவிரமடையும் வாய்ப்புள்ளது.

29-ஆக்-2025

ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் 2 முறை மட்டும் இதேயளவு என இறைச்சி உண்பதை குறைத்துக் கொள்வது நல்லது என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

29-ஆக்-2025