முதியவர்கள் கீழே விழுவதை தவிர்க்க சில டிப்ஸ்!

04-நவ்-2025

புள்ளிவிபரங்களின்படி, 65 வயதுக்கு மேல் உள்ள, மூன்றில் ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை கீழே விழுகின்றனர். சற்று கவனமாக இருந்தால் இதனை தடுக்க இயலும்.

04-நவ்-2025

முதியோர் கீழே விழுவதை தவிர்க்க, படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சில நிமிடங்கள் அமர்ந்து, பின் எழுந்து நின்று, அதன் பின்னரே நடக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

04-நவ்-2025

தினசரி சமநிலை பயிற்சி என்பது அவசியம்.

04-நவ்-2025

இரவு நேரத்தில் முதியோர் பயன்பாட்டு இடங்களில் வெளிச்சம் இருக்க வேண்டும்.

04-நவ்-2025

கட்டாயம் கண் பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டும்.

04-நவ்-2025

எலும்பு வலிமைக்கு கால்சியம், வைட்டமின் மருந்துகளை டாக்டர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

04-நவ்-2025

முதியோர் அமரும் நாற்காலி, கட்டிலின் உயரம் சரியாக இருப்பதை கவனிக்க வேண்டும். அதிக உயரம் அல்லது மிக குறைவான உயரம் இருப்பின், எழுந்து, அமர சிரமம் இருக்கும்.

04-நவ்-2025

துாக்கமின்மைக்கு டாக்டர் பரிந்துரை இன்றி, மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.

04-நவ்-2025

ரத்தசோகை, குறைந்த சர்க்கரை அளவு காரணமாக மயக்கம் ஏற்படும். இதனை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

04-நவ்-2025

நீர்க் குறைவாலும் மயக்கம் ஏற்படும்; இதை தவிர்க்க, தாகம் இல்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

04-நவ்-2025