குளிருக்கு இதமாக காரசாரமான மிளகு சாதம்
தேவையானப் பொருட்கள்: சாதம் - 1 கப் (உதிரியாக வடித்தது), நல்லெண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன், கடுகு, சீரகம், கடலை பருப்பு - 0.5 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
முந்திரி பருப்பு - 8 முதல் 10, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பச்சை மிளகாய் - 1, துருவிய இஞ்சி - 1 ஸ்பூன், மிளகு - 1.5 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 0.25 ஸ்பூன்.
அடுப்பில் கடாயை வைத்து சுடானவுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
அதே கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றவும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இதில் கருவேப்பிலை, பெருங்காயம், நடுவில் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையில், ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
சில நிமிடங்கள் கழித்து சாதத்தை சேர்த்து கிளறினால், ஆரோக்கியமான மிளகு சாதம் ரெடி. குளிர் காலத்தில் சாப்பிட இதமாக இருக்கும். உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட சுவை அள்ளும்.