கொளுத்தும் வெயிலில் தவிர்க்க வேண்டியவை

03-ஏப்-2026

காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை வெளியில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

03-ஏப்-2026

அப்படியே செல்வதாக இருந்தால், தண்ணீர் பாட்டில், குடை அவசியம்.

03-ஏப்-2026

வயதானவர்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்கலாம். நடந்து செல்லாமல், வாகனங்களில் செல்வது நல்லது. அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் அடங்கிய குறிப்பை வைத்திருப்பது நலம்.

03-ஏப்-2026

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்லும்போது, மருத்துவ அறிக்கை அடங்கிய பைல், மொபைலில் இருப்பதை உறுதி செய்யலாம். இது அவசர கால சிகிச்சைக்கு பயன் தரும்.

03-ஏப்-2026

உடல் அசவுகர்யமாக இருப்பதை உணர்ந்தால், சுய மருத்துவம் எடுக்காமல், உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

03-ஏப்-2026

வெயிலின் தாக்கத்தை தணிக்க, அதிகமாக தண்ணீர் குடிப்பது, நீர் சத்துள்ள பழங்கள், ஜூஸ், இளநீர், மோர் எடுத்து கொள்வது அவசியம்.

03-ஏப்-2026

தளர்வான பருத்தி ஆடைகள் அணிவது, அடிக்கடி தலை குளிப்பதுடன், சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

03-ஏப்-2026