உதடு வறட்சியைத் தடுக்கும் எளிய வழிகள் சில!

22-ஆக்-2024

உதடுகள் மென்மையானவை என்பதால் அதனால் ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்வது அவசியம். ஆனால் சிலருக்கு எப்போது உதடு வறண்டு காணப்படும்.

22-ஆக்-2024

இப்படி இருப்பவர்களுக்கு உதடு வறட்சியைப் போக்கும் இயற்கை வழிகள் என்னென்ன என அறிந்துகொள்ளலாம்.

22-ஆக்-2024

முதலில் உணவில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவும்.

22-ஆக்-2024

நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.

22-ஆக்-2024

தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும். இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது.

22-ஆக்-2024

கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம்.

22-ஆக்-2024

இயற்கை மாய்ஸ்ச்சுரைசரான தேன், வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, புண்களை சீக்கிரம் குணப்படுத்தும்.

22-ஆக்-2024

வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் மெதுவாக ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யலாம்.

22-ஆக்-2024