இன்று அமாவாசை, அமாசோமவாரம்... அரச மரத்தை வலம் வந்து வழிபட அனைத்தும் நிறைவேறும்!

08-ஏப்-2024

பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது.

08-ஏப்-2024

காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர்.

08-ஏப்-2024

இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு.

08-ஏப்-2024

இன்று மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம்.

08-ஏப்-2024

ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும்.

08-ஏப்-2024

திங்களும், அமாவாசையும் இணையும் நாள் அமாசோமவாரம்.

08-ஏப்-2024

இந்நாளில் அதிகாலையில் நீராடி, கோயிலில் உள்ள அரச மரத்தை 11 முறை சுற்றி வருவர். இதற்கு அமாசோம பிரதட்சணம் என்று பெயர்.

08-ஏப்-2024

அன்றையதினம் விடியற்காலையில் அரசமரத்தை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினால் நோய்நொடி இல்லாமல் வாழலாம். இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட எல்லா நன்மையும் நடக்கும்.

08-ஏப்-2024