இன்று மகாவீர் ஜெயந்தி!

31-மார்-2026

எந்த பிராணியையும் கொல்லவோ, பிறர் கொல்வதை ஆமோதிப்பதோ, அதற்கு உடந்தையாக இருக்கவோ கூடாது. அனைத்து உயிர்களுக்கும் ஒரே மதிப்புதான் இருக்கிறது.

31-மார்-2026

எப்போதும் நேர்மையுடன் இருங்கள். அதுதான் நல்வாழ்க்கையின் அஸ்திவாரம்.

31-மார்-2026

பிறர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படக்கூடாது. அதனால் சிறிதளவும் நன்மை ஏற்படாது.

31-மார்-2026

அளவான உணவு, தேவையான உடை மற்றும் பொருட்களையே வைத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை போக மீதியுள்ளதை தானம் செய்து விட வேண்டும்.

31-மார்-2026

எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.

31-மார்-2026

செய்த தவறை ஒத்துக்கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.

31-மார்-2026

ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப்பிடுங்கி எறிவது மிக கடினம்.

31-மார்-2026

நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு ஏற்படாது. நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கமும் வாய்க்காது.

31-மார்-2026