வெர்டிகோ அறிகுறிகள், காரணங்கள் அறிவோமா!

வெர்டிகோ என்பது உலகமே சுற்றுவது போல உணர்வது, லேசான தள்ளாட்டமும் இருக்கும்.

வெர்டிகோ எந்த வயதிலும் வரலாம். இப்பிரச்னை உள்ளவர்களுக்கு தலைசுற்றல், பார்வை மங்கல், குமட்டல், சோர்வு போன்றவை காணப்படும்.

அதே சமயம், அந்தந்த வயதில் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு ஏற்ப தலைசுற்றலுக்கான காரணங்கள் மாறுபடும். வாழ்க்கை முறை மாற்றமும் வெர்டிகோவிற்கு காரணமாகிறது.

குறிப்பாக, 'வெஸ்டிபிளார் மைக்ரேன்' எனப்படும் தலை வலி, நேரத்திற்கு சாப்பிடாதது, போதுமான அளவு துாக்கம் இல்லாதது, அதிக ஒலி, வெயிலில் செல்வது போன்றவையாகும்.

40 வயதிற்கு மேல் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு வெர்டிகோ வரலாம்.

இது தவிர, வைட்டமின் டி குறைபாடு, வைட்டமின் பி 12 குறைபாட்டினால், புற நரம்பு மண்டலம் பலவீனமாவது, தலையில் அடிபட்டால் சிகிச்சைக்கு பின் தலைசுற்றல வரலாம்.

செர்விக்கல் ஸ்பான்டி லோசிஸ் எனப்படும் கழுத்து வலியால் வெர்டிகோ வருவது மிகவும் அபூர்வம்.

வழக்கத்திற்கு மாறாக சிறிய மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றால் அதை சுலபமாக கண்டறிந்து சரி செய்யலாம்.