உஷார்... வாரத்துக்கு ஐந்து மணி நேரமாவது உடல் உழைப்பு இருக்கணும்!

27-ஜூன்-2024

இந்தியாவில் பாதி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாததால், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள உடற்தகுதியை பெறவில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

27-ஜூன்-2024

இந்தியாவில் வயது வந்தவர்கள் மத்தியில் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2022ல் 49.4 சதவீதமாக உள்ளது. அதில், பெண்கள் 57 சதவீதம் பேர். ஆண்கள் 49 சதவீதம் பேர்.

27-ஜூன்-2024

உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2000 ல் 22.4 சதவீதமாக இருந்தது. இது குறித்து 195 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது.

27-ஜூன்-2024

இது சரி செய்யப்படாமல் இருந்தால், 2030 ல் 59.9 சதவீதம் பேர் போதிய உடற்தகுதி இல்லாமல் இருப்பார்கள். இதனால், உடல்நலக்குறைவு மற்றும் நோயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.

27-ஜூன்-2024

உலகளவில் 180 கோடி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர். மேற்கத்திய நாடுகளில் அதிகம் வருமானம் கொண்ட நாடுகளில் 28 சதவீதம் பேர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

27-ஜூன்-2024

போதிய உடல் உழைப்பு இல்லாத பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாடுகள் உள்ளன.

27-ஜூன்-2024

அதேநேரத்தில் வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளத்தில் பெண்கள் உரிய உடற்தகுதியுடன் உள்ளனர் என லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

27-ஜூன்-2024

வயது வந்தவர்களுக்கு வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பு அவசியம். இல்லாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மார்பக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

27-ஜூன்-2024